Friday 19 December 2014

இராமனை திட்டித் தீர்த்த காதை..

"இராமகாதை
கதையே ஆனாலும்
துர் நிகழ்வு
ஒன்று உண்டு.
அந்த துர் நிகழ்வின்
தொடர்ச்சியாக
இன்னும் இன்னும் பல
துர் நிகழ்வுகள்.


தொடர்ச்சியெனில்...
கருடன் செத்தது,
வாலியை வதைத்தது,
இராவணன் அழிந்தது,
சம்பூகனை அறுத்தது,
மனைவியை எரித்தது,
தம்மக்களை தொலைத்தது..
என நீளும் பல நிகழ்வுகள்.

தன் மனைவியின்
பிரிவை தாங்காதவன்
தம்பியை தன்னுடன் வைத்து,
ஊர்மிளை வாழ்வதனை
அழித்தது ஒர் நிகழ்வெனில்..,

அண்ணன் மனைவியுடன்
ஆட்சியை பறிக்கும்
சுக்ரீவன் சூழ்ச்சிக்கு
வாலியை வதைத்தது
இன்னொரு நிகழ்வு.

கானகம் சென்றும்
பரதன் முடிசூட்டை
வற்புறுத்தாதது
இராமனின் பண்பன்றோ?
அதன் தொடர்ச்சி போலும்
இன்றைய
மக்கள் முதல்வரும்,
பன்னீரும்,
சிறுமை நிகழ்வுகளும்.

இந்துவென்பவன்
இராமன் பேர் சொல்லி
மசூதி இடித்தது நிகழ்வெனில்,
அதுமுதல்
தீவிரவாதி யாராயினும்
அவன்
இஸ்லாமியன்தான் என்பது,
புனைந்தவன் செய்த நிகழ்வு.

சேதுவை மேடறுத்தால்,
நன்மை கோடியெனில்,
மேடறுக்க மறுப்பு சொல்லும்
மேட்டுக்குடி சொல்வதெல்லாம்
இராமன் பேரைத்தான்.

'இத்தனை நிகழ்வுகள்
தொடர்ச்சியெனில்
அம்முதல் நிகழ்வென்ன?'
என சிலர் கேட்பர்.
'வேறென்ன?
இராம ஜென்மம் தான்'
என நான் சொல்லியா?
ஊருக்கு தெரியும்.
ஊரே அறியும்.

1 comment: