Sunday 30 June 2013

என்னைபோல் ஒருவன் - என் அப்பா - நினைவு தினம் இன்று


என்னைப்போல்
ஒருவனாய்
நீ!
உன்னிடமிருந்து
வந்ததால்
நான்!

உன்
சுட்டுவிரல்
பற்றியே
இவ்வுலகமதில்
நடைபயின்றேன்.

நீ
சுட்டுகிற
திசையினிலே
உன் உலகம்
நானறிந்தேன்.

வெறுப்பறியா புன்னகை,
எடுத்தெறியா உன் கை!
களைப்பறியா உழைப்பில்
களிப்பறியா வாழ்க்கை!

தினமணியும்
முரசொலியும்
உன் கண்கள்
படிக்கும்.
எனக்கும் பிடிக்கும்.

கடவுள் இல்லை
சிவாஜி பிடிக்கும்
என்பாய் நீ.
கடவுள் உண்டு
சிவாஜி பிடிக்காது
பொய் சொல்வேன் நான்.

எளிமைக்கு
எளிமை நீ!
எண்பதுகளின்
ஆண்மகன் நீ!
சட்டைகள் ஏழு!
கால்சராய் அய்ந்து!
வேட்டிகள் பத்து!
இரு வயது செருப்பு,
நரைத்த முடி பழுப்பு!
எளிமை சிரிப்பு!

நீ!
இருக்கும் வரை,
பதின் வயது
சண்டையை, வெறுப்பை
உமிழ்ந்தேன் உன்மேல்.
இப்போது,
இல்லாமை
சுட்டுகிறது
உன்
அருமையை..

யாருடைய
அப்பாவையேனும்
கண்டுற்றால்
கடைசியாய்
நீ தரித்த
கோலம்
கொல்கிறது
என்னை.

வெறுக்கிறேன்
இம் மண்ணை..

1 comment:

  1. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete